தக்கலை: மதுக்கடைகள் மூடகேட்டு பாஜக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

5பார்த்தது
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜ மகளிர் அணி மாவட்ட தலைவர்கள் ராணி, கலா ஆகியோர் தலைமை வகித்தனர். பாஜ மாவட்டத் தலைவர்கள் சுரேஷ், கோபகுமார் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி, எம் ஆர் காந்தி எம்எல்ஏ உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி