முளகுமூடு பகுதியைச் சேர்ந்த மெரின் ரைகில் (37) என்பவர், தொழில் நஷ்டம் மற்றும் குடும்பப் பிரச்சனை காரணமாக தக்கலை லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டார். அலுமினிய கோட்டிங் கம்பெனி நடத்தி வந்த இவருக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனைவி பிள்ளைகளுடன் பிரிந்து சென்றுள்ளார். நேற்று முன்தினம் லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்த இவர், நேற்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.