தக்கலை: செல்போன் கடை உடைத்து ரூ.46 ஆயிரம் திருட்டு

1172பார்த்தது
தக்கலை: செல்போன் கடை உடைத்து ரூ.46 ஆயிரம் திருட்டு
நேற்று காலை கீழப்பரைக்கோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (37) தனது மேட்டுக்கடை சந்திப்பில் உள்ள செல்போன் கடைக்கு வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, ரூ. 46 ஆயிரம் ரொக்கம், 5 ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள் மற்றும் 10 சாதாரண செல்போன்கள் என மொத்தம் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து மணிகண்டன் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி