நெய்யூர் அருகே மாங்குழி பகுதியைச் சேர்ந்தவர் ரவிராஜ் (50). இவர் தக்கலை பகுதியில் உள்ள ஒரு கோழிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திடீரென பக்கவாதம் ஏற்பட்டது. அதுமுதல் உடல்நிலை சரியில்லாத ரவிராஜ் மனவருத்தத்தில் இருந்து வந்தார். ஆனாலும் கஷ்டப்பட்டு வேலைக்குச் சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 15) வழக்கம்போல் கோழிக்கடைக்குச் சென்ற ரவிராஜ் அங்கு இருந்த விஷத்தை தண்ணீரில் கலந்து குடித்துள்ளார்.
இதையடுத்து சிறிது நேரத்தில் ரவிராஜின் வாயிலிருந்து நுரை தள்ளியது. இதனைக் கண்ட அதிர்ச்சியடைந்த கோழிக்கடை உரிமையாளர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அழகியமண்டபம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரவிராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரவிராஜின் மனைவி வளர்மதி அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.