களியல் பகுதியைச் சேர்ந்த ஹனீஸ் பாத்திமா (25) என்பவர் நேற்று வேலை முடிந்து தக்கலை பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, அவரது கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து அவர் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.