தக்கலை அருகே திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சிராஜுதீன் (39) தனது ஆட்டோவை நேற்று இரவு வீட்டு முன்பு நிறுத்தியுள்ளார். இன்று காலை பார்த்தபோது, ஆட்டோவின் டேஷ்போர்டை உடைத்து அதில் இருந்த ₹6 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து சிராஜுதீன் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.