திருவட்டாரை அடுத்த மாத்தாரைச் சேர்ந்த இயற்கை விவசாயி மிக்கேல், தனது தோட்டத்தில் விளைவித்த பிரம்மாண்ட வாழைக்குலைகளால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இரு நாட்களுக்கு முன்பு 33.400 கிலோ எடையுள்ள வாழைக்குலையை அறுவடை செய்த நிலையில், நேற்று (4-ம் தேதி) மீண்டும் 36.650 கிலோ எடையுள்ள வாழைக்குலையை அறுவடை செய்துள்ளார். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்வதாக மிக்கேல் தெரிவித்துள்ளார். அவரது இந்த சாதனை இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.