திருவட்டார்: மது போதையில் தூங்கிய தொழிலாளி சாவு

77பார்த்தது
திருவட்டார்: மது போதையில் தூங்கிய தொழிலாளி சாவு
திருவட்டார் அடுத்த பெருஞ்சிலம்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் (46) பள்ளியாடி வைத்தியசாலையில் ஊழியராக இருந்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் அதிக மதுபோதையில் வீட்டிற்கு வந்த ராஜ் எதுவும் சாப்பிடாமல் உறங்கச் சென்றார். ஆனால் மறுநாள் காலையில் அவர் நீண்ட நேரமாக எழுந்திருக்கவில்லை.

 வீட்டில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது மயக்க நிலையில் கிடந்த அவரை சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த போது ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திருவட்டார் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி