குமரியின் சுற்றுலா தலமான மாத்தூர் தொட்டி பாலத்தை பார்வையிட வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர், பரளியாற்றில் குளித்தபோது செல்வலிங்கம் (22) என்ற வாலிபர் பாறையில் சறுக்கி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். குலசேகரம் தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டனர். திருவட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.