தக்கலை: ஆலமரத்தடியில் கழுத்தறுக்கப்பட்ட முதியவர்

1459பார்த்தது
தக்கலை: ஆலமரத்தடியில் கழுத்தறுக்கப்பட்ட முதியவர்
தக்கலை அருகே மேக்காமண்டபம் பகுதியைச் சேர்ந்த மணி (60) என்பவர், சந்தைப் பகுதியில் உள்ள கடை திண்ணைகளில் இரவு நேரங்களில் தூங்கி வந்துள்ளார். இன்று (ஆகஸ்ட் 20) அதிகாலை, மேக்காமண்டபம் சந்தை அருகில் உள்ள ஆலமரத்தின் கீழ் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக கொற்றிக்கோடு போலீசார் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் மணியுடன் ஒருவர் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.