
குழித்துறை: தமுஎகச வின் யுத்த எதிர்ப்பு முழக்கம்
உலகினை அழித்திடும் யுத்தம் வேண்டாம் என்ற கோரிக்கையுடன் தமுஎகச சார்பில் குழித்துறை சந்திப்பில் நேற்று (14-ம் தேதி) மாலையில் யுத்த எதிர்ப்பு இயக்கம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கவிஞர் தக்கலை ஹலீமா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், செயலாளர் அருள் மனோ, மாநில செயற்குழு உறுப்பினர் ஜயகாந்தன், தமுஎகச மாநில இணைபொதுச்செயலாளர் லட்சுமிகாந்தன், மாணவர் வாலிபர் சங்கத்தினர், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என பலர் திரண்டு யுத்த எதிர்ப்பு கோஷங்களை முழங்கினர்.






































