2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. இதனையொட்டி, அக்கட்சியின் தலைவர் சீமான், திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவித்தார். இதில் குமரி மாவட்டத்திற்கான வேட்பாளர்களும் அடங்குவர். கன்னியாகுமரி தொகுதியில் மரிய ஜெனிபர், நாகர்கோவிலில் மு.முத்துக்குமார், குளச்சலில் ஆன்ஷி ஷோபா, பத்மாநாபபுரத்தில் சு.சீலன், விளவங்கோடு தொகுதியில் மரிய ஸ்டெல்லா, கிள்ளியூரில் பி.வ.ஹிம்லர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.