குமரி: அதிமுக நிர்வாகி வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை

1079பார்த்தது
குமரி: அதிமுக நிர்வாகி வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை
குமரி மாவட்டம் பொன்மனை பகுதியைச் சேர்ந்த அதிமுக பூத் கமிட்டி நிர்வாகி சிவகுமார் (35) வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான சில நாட்களில் மனைவியைப் பிரிந்த இவர், நேற்று மாலை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். தந்தை மோகன் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி