அடைக்காக்குழி: மார்க்சிஸ்ட் கட்சி தர்ணா போராட்டம்

365பார்த்தது
அடைக்காக்குழி: மார்க்சிஸ்ட் கட்சி தர்ணா போராட்டம்
அடைக்காக்குழி ஊராட்சிக்குட்பட்ட பழுதடைந்த செங்கவிளை பீலிக்குளம் சாலைக்கு முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தில் ரூ 75.50 லட்சம் மதிப்பில் சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தக் கோரி, ஊராட்சி அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நேற்று மாலையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. வட்டாரக்குழு உறுப்பினர் லெனின் தலைமையில் மாவட்டச்செயலாளர் செல்லசாமி துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய மோகனன் நிறைவுரை ஆற்றினார். இதில் 125 பேர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி