அருமனை: தொடர்ந்து மது விற்ற பெண் கைது

1பார்த்தது
அருமனை: தொடர்ந்து மது விற்ற பெண் கைது
அருமனை பகுதியில் மதுபானம் பதுக்கி விற்றதாக புண்ணியம் பகுதியை சேர்ந்த சுந்தரபாய் (56) என்பவர் 26 மது பாட்டில்களுடன் கடந்த 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே பலமுறை மது விற்பனை செய்ததாக வழக்குகள் பதிவாகியுள்ளன. ஜாமினில் வெளியே வந்த சுந்தரபாய் நேற்று மீண்டும் அவரது வீட்டருகே மது விற்றபோது, அருமனை போலீசார் அவரிடம் இருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து மது விற்பனையில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி