டெம்போ கவிழ்ந்து ஓட்டுநர் பலி: தக்கலை அருகே சோகம்

1120பார்த்தது
டெம்போ கவிழ்ந்து ஓட்டுநர் பலி: தக்கலை அருகே சோகம்
தக்கலை அருகே மருதவிளையில் கட்டுமானப் பணிக்காக பாறைப் பொடியை ஏற்றிச் சென்ற டெம்போ, மேடான பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி நகர்ந்தது. இதனால், ஓட்டுநர் செல்வகுமார் (37) டெம்போ கவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தில் வெளியே குதித்தார். இதில் தலையிலும் கழுத்திலும் பலத்த காயமடைந்த அவர், மீட்கப்பட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி சித்ரா அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி