எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு: 8 ரயில்கள் மாம்பலத்தில் நிற்கும்

739பார்த்தது
எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு: 8 ரயில்கள் மாம்பலத்தில் நிற்கும்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11 ஆவது நடைமேடைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பயணிகளின் வசதிக்காக 8 ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் கூடுதலாக நின்றுச்செல்ல தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் - திருச்சி சோழன் அதிவிரைவு ரயில், சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி அதிவிரைவு ரயில், சென்னை எழும்பூர் - புதுச்சேரி விரைவு ரயில், சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை அதிவிரைவு ரயில், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி நெல்லை அதிவிரைவு ரயில், சென்னை எழும்பூர் - மதுரை பாண்டியன் அதிவிரைவு ரயில், சென்னை எழும்பூர் - மன்னார்குடி விரைவு ரயில், சென்னை எழும்பூர் - சேலம் அதிவிரைவு ரயில் ஆகியவை பிப்ரவரி 22 முதல் ஏப்ரல் 6 வரை மாம்பலம் ரயில் நிலையத்திலும் நின்றுச்செல்லும்.

தொடர்புடைய செய்தி