நாகர்கோவில் , வெட்டூர்னிமடம் - பார்வதிபுரம் சாலையில் கட்டயன்விளை பகுதியில் இன்று (ஆகஸ்ட் 20) காலை 7.30 மணியளவில் நடந்த விபத்தில், திங்கள் சந்தை பகுதியைச் சேர்ந்த அடையாளம் தெரியாத ஒருவர் தலையில் பலத்த காயமும், ஒரு காலில் எலும்பு முறிவும் அடைந்துள்ளார். இவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.