குளச்சலில் மீன்பிடித் தொழில் மந்தம்: மீனவர்கள் கவலை

959பார்த்தது
குளச்சலில் மீன்பிடித் தொழில் மந்தம்: மீனவர்கள் கவலை
குளச்சல் கடல் பகுதியில் மீன்பிடித் தொழில் மந்தமடைந்துள்ளது. கேரை மீன்களின் சீசன் காலமாக இருந்தும், சூறைக்காற்று காரணமாக விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல முடியாமல் பாதியிலேயே கரை திரும்புகின்றன. இதனால், குறைந்த அளவே கேரை மீன்கள் கிடைப்பதால், டீசல் செலவுக்கு கூட பணம் கிடைக்கவில்லை என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட வள்ளங்கள், கட்டுமரங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி