களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்த் தலைமையிலான போலீசார் எரத்தாவூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முறையான அனுமதி இன்றி செம்மண் ஏற்றி வந்த டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், அனுமதி இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து டெம்போ பறிமுதல் செய்யப்பட்டது. டெம்போ டிரைவர் சுனில்சிங் (43) மற்றும் நிலத்தின் உரிமையாளர் கனகராஜ் மகன் சுஜின் (27) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.