கொல்லங்கோடு: 2000 லிட்டர் மண்ணெண்ணெயுடன் ஒருவர் கைது

1பார்த்தது
கொல்லங்கோடு: 2000 லிட்டர் மண்ணெண்ணெயுடன் ஒருவர் கைது
பூத்துறை மீனவ கிராமத்தில் இருந்து அரசு மானிய விலையில் விற்கப்படும் மண்ணெண்ணெயை காரில் கேரளாவிற்கு கடத்த முயன்றபோது, கொல்லங்கோடு போலீசார் நீரோடி பகுதியில் காரை மடக்கிப் பிடித்தனர். காரில் 55 கேன்களில் சுமார் 2000 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் வாகனத்துடன் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்து, காரை ஓட்டி வந்த நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த லாலு (31) என்பவரை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி