மீனச்சல் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வக்கீல் விஜயகுமார் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நேற்று குழித்துறை நீதிமன்றத்திற்கு ஜான்சன் சென்றபோது, விஜயகுமார் மற்றும் அவரது தரப்பில் வந்த 4 பேர் சேர்ந்து ஜான்சனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் ஜான்சன் படுகாயமடைந்துள்ளார். இது குறித்து களியக்காவிளை போலீசில் இரு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர். போலீசார் இரு தரப்பிலும் மொத்தம் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.