குழித்துறை: நீதிமன்ற வளாகத்தில் கலாட்டா - ஒருவர் கைது

0பார்த்தது
குழித்துறை: நீதிமன்ற வளாகத்தில் கலாட்டா - ஒருவர் கைது
குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் இன்று மதுபோதையில் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டியபடி சுற்றித் திரிந்த விஜயகுமார் என்பவரை களியக்காவிளை போலீசார் கைது செய்தனர். மகளிர் விரைவு நீதிமன்ற பெஞ்ச் கிளார்க் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராகாமல், மதுபோதையில் நீதிமன்ற வளாகத்தில் அவர் சுற்றித் திரிந்தது விசாரணையில் தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி