குமரி: ரயிலில் 1.5 கிலோ தங்கம் கொள்ளை.. 5 பேர் கைது

1358பார்த்தது
குமரி: ரயிலில் 1.5 கிலோ தங்கம் கொள்ளை.. 5 பேர் கைது
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த நகை வியாபாரி ஜோஸ், கடந்த 16ஆம் தேதி குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் குமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையத்திற்கு வந்தபோது, அவரது பையில் இருந்த ஒன்றரை கிலோ தங்க நகைகள் திருடு போனது. இது தொடர்பாக குழித்துறை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை அமைத்து திருச்சூர் பகுதியைச் சேர்ந்த அபுதாஹிர், டோலி, கோபகுமார், சர்புதின், சித்திக் ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் பணம் மீட்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி