குமரி: வீடுகளில் திருடிய 2 கேரளா கொள்ளையர்கள் கைது

4பார்த்தது
குமரி: வீடுகளில் திருடிய 2 கேரளா கொள்ளையர்கள் கைது
பளுகல் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் வீட்டில் கடந்த 16ஆம் தேதி நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசார் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரபீக் (38) மற்றும் சுதீர் (47) ஆகியோரைக் கைது செய்தனர். இவர்கள் மீது கேரளாவில் 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழக பகுதிக்கு மீண்டும் வந்தபோது போலீசார் மடக்கிப் பிடித்து, அவர்களிடம் இருந்து 12 பவுன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி