மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி புனித அந்தோனியார் திருத்தல பங்கு பணியாளர் சகாயதாஸ் என்பவரின் காரை வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் 3 பேர் கொண்ட போதை கும்பல் அடித்து உடைத்தது. சத்தம் கேட்டு பொதுமக்கள் துரத்தி பிடித்ததில் ஒருவர் தப்பியோட, 2 பேர் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.