தமிழகத்தின் போதை கலாச்சாரத்தை கண்டித்து குமரி மாவட்ட பாரதிய ஜனதா இளைஞர் அணி சார்பில் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞர் அணி தலைவர் அஸ்வின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தேசிய செயற்குழு உறுப்பினர் உமாரதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பாஜக கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தலைவர்கள் ஆர்.டி.சுரேஷ், கோபகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டம் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது.