குமரி: பரிதாப நிலையில் காங்கிரஸ் - விஜயதாரணி பேட்டி

1204பார்த்தது
விளவங்கோடு தொகுதி பாரதிய ஜனதா தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி நேற்று செய்தியாளர் சந்திப்பில், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு என்றைக்கும் வளர்ச்சி இல்லாத சூழ்நிலை இருந்து வருவதாகவும், இது காங்கிரசின் பரிதாப நிலை என்றும் கூறினார். திமுக கூட்டணி என்று கூறுகிறார்களே தவிர, இந்தியா கூட்டணி என்று ஒருபோதும் கூறியதில்லை என்றும், தமிழ்நாட்டில் காங்கிரசார் 3ம், 4ம் பட்சமாக உள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி