தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி (SIR) நடைபெற உள்ளது. இது தொடர்பாக குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் குழித்துறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் விஜய்வசந்த் எம்.பி. ஆகியோர் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வரைமுறைகளை கருத்தில் கொண்டு சரிபார்க்கும் பணிகளை செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கினர். காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.