குமரி மாவட்ட காவல்துறை அதிரடி: 3.5 கிலோ குட்கா பறிமுதல்

1076பார்த்தது
குமரி மாவட்ட காவல்துறை அதிரடி: 3.5 கிலோ குட்கா பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை ஒழிக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS உத்தரவின் பேரில் காவல்துறை தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அஞ்சுகிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், செண்பகராமபுரம், சத்தியநகர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் (40) என்பவரிடம் இருந்து 3.5 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் விற்பனை, கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி