குமரி: நகை கடை முன்பு பெண் போராட்டம்

1361பார்த்தது
கிள்ளியூர் அருகே மாங்கரை பகுதியைச் சேர்ந்த அனிதா, தனது மகளின் திருமணத்திற்காக மார்த்தாண்டம் அருகே ஞாறம்விளை பகுதியில் உள்ள நகைக்கடையில் 26 பவுன் நகை செய்ய ஒரு வருடத்திற்கு முன்பு முழுப் பணத்தையும் செலுத்தியுள்ளார். ஆனால், ஒரு வருடம் ஆகியும் 23 பவுன் நகையை வழங்காமல் நகைக்கடை உரிமையாளர் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட அனிதா காவல் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், இன்று நகைக்கடையின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி