குமரி: கோவில் குளம் ஆக்கிரமிப்பு சுற்றுச்சுவர் இடிப்பு

3பார்த்தது
மார்த்தாண்டம், கோதேஸ்வரம் கோயில் அருகே உள்ள 1.35 ஏக்கர் பரப்பளவு குளத்தின் ஓரத்தில் 7 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், தனிநபர் ஒருவர் சுற்றுச்சுவர் அமைத்து குளத்தை ஆக்கிரமித்திருந்தார். இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில், இன்று (3-ம் தேதி) அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் வந்து ஆக்கிரமிப்பு காம்பவுண்டு சுவரை இடித்து அகற்றினர். ஆக்கிரமிக்கப்பட்ட 7 வீடுகளுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி