குமரி: பெண்ணுக்கு கொலை மிரட்டல்; ராணுவ வீரர் மீது வழக்கு

1443பார்த்தது
குமரி: பெண்ணுக்கு கொலை மிரட்டல்; ராணுவ வீரர் மீது வழக்கு
தேவிகோடு பகுதியை சேர்ந்தவர் சௌமியா ராணி (36). இவர் 100 நாள் வேலை திட்ட பொறுப்பாளராக வேலை செய்கிறார். இவருக்கும் இவர்களது வீட்டு அருகே வசிக்கும் ராணுவ வீரரான ஷிபின் என்பவருக்கு காம்பவுண்ட் சுவர் கட்டுவது சம்பந்தமாக பிரச்சனை இருந்தது. நேற்று ஷிபின் சௌமியா ராணியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து செளமியா பளுகல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஷிபின் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி