மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை நீக்கியதை கண்டித்து நேற்று மேற்புறம் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. படந்தாலுமூடு - மடிச்சல் சாலையில் நடந்த இந்த போராட்டத்திற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், தாரகை கத்பட் எம்எல்ஏ உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.