புதுக்கடையில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

83பார்த்தது
புதுக்கடையில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
புதுக்கடை அருகே அரசகுளம் பகுதியை சேர்ந்தவர் வினோத் (32). சென்ட்ரிங் தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. 

இதனால் அவரது குடும்ப வீட்டில் தனியாக வசித்து வந்தார். வினோத் இதய நோய், நீரிழிவு நோய்களால் அவதிப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருந்து சாப்பிட்டும், நோய் குணமாகாததால் மனவருத்தத்தில் இந்த வினோத் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்தார். அவரது சகோதரி சிந்துவின் புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் இன்று (24-ம் தேதி) வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி