மார்த்தாண்டம்: நள்ளிரவில் டாரஸ் லாரியில் திடீர் தீ

1பார்த்தது
மார்த்தாண்டம்: நள்ளிரவில் டாரஸ் லாரியில் திடீர் தீ
மார்த்தாண்டம் பகுதியில் நள்ளிரவில் கற்கள் ஏற்றி வந்த டாரஸ் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. லாரியின் பின்பக்க கேபினில் இருந்து தீ பரவியதால், டிரைவர் உடனடியாக லாரியை நிறுத்திவிட்டு குதித்து உயிர் தப்பினார். சிறிது நேரத்தில் கேபின் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் மற்றும் குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.