மார்த்தாண்டம்: மனைவியை தாக்கிய கணவன் மீது வழக்கு

1202பார்த்தது
மார்த்தாண்டம்: மனைவியை தாக்கிய கணவன் மீது வழக்கு
மார்த்தாண்டம் அருகே செம்மண்காலை பகுதியை சேர்ந்த சிவகுமார் (37) தினமும் மது அருந்திவிட்டு தனது மனைவி ஜெனிபாவை (28) அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜெனிபா தாய் வீட்டிற்கு சென்றபோது, சிவகுமார் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஜெனிபா குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மார்த்தாண்டம் போலீசார் சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி