சிதறால் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (44) மற்றும் அவரது மனைவி சுஜித்ரா (37) ஆகியோர் நேற்று பைக்கில் மார்த்தாண்டத்திலிருந்து ஆற்றூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். மார்த்தாண்டம் காவல் நிலையம் அருகே வந்தபோது, எதிரே வந்த கார் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரை ஓட்டி வந்த கல்குளம் பகுதியைச் சேர்ந்த முகேஷ் மோகன் (33) மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.