பரக்குன்று பகுதியைச் சேர்ந்த பிரசன்னகுமாரி (57) என்பவர், மதுப்பழக்கம் கொண்ட தனது மருமகன் பிஜுவால் தாக்கப்பட்டார். நேற்று மதுபோதையில் பிரசன்னகுமாரி வீட்டிற்கு சென்ற பிஜு, தகராறு செய்து மாமியாரை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பிரசன்னகுமாரி குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.