பளுகல் பகுதியைச் சேர்ந்த 62 வயதான, மனநலம் பாதிக்கப்பட்ட டாளி என்பவர் தனியாக வசித்து வந்தார். நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, டாளி அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து பளுகல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.