தேங்காப்பட்டணம் :  தடைசெய்யப்பட்ட மீன்களுடன் வாகனம் பறிமுதல்

1732பார்த்தது
தேங்காப்பட்டணத்தில் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி தடைசெய்யப்பட்ட யானை திருக்கை மற்றும் முண்டக்கண் பெல்ட் சுறா வகை மீன்களை சிலர் பிடித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், குமரி மாவட்ட களியல் வனத்துறையினர் தேங்காப்பட்டணம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் அதிக அளவில் தடைசெய்யப்பட்ட மீன்கள் இருந்ததை கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.