நாகர்கோவிலில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை

973பார்த்தது
நாகர்கோவிலில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் புது குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியிருப்புகளை சுற்றி மது பாட்டில்கள் கிடப்பதாகவும், இரவு நேரங்களில் குடிமகன்கள் பெண்களிடம் ஆபாச செய்கை காட்டுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்திய நிலையில், கடையில் வாசலை தற்காலிகமாக மூடுவதாக போலீசார் கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி