கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே நகராட்சிக்கு சொந்தமான பொது கழிப்பிடம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பலமுறை நகராட்சியில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கழிப்பிடத்தின் பல பாகங்கள் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.