பன்றி பண்ணையை அகற்ற கோரிக்கை

719பார்த்தது
பன்றி பண்ணையை அகற்ற கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் ஆலஞ்சோலை அருகே பீலிக்கோடு பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் பன்றி பண்ணையால் துர்நாற்றம் வீசுவதாகவும், கழிவு மேலாண்மை சரியில்லாததால் பொதுமக்கள், குழந்தைகள் பாதிப்பதாகவும், நீர் மாசு ஏற்படுவதாகவும் கூறி, விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் டி.டி. பிரவின் அவர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். கடையால பேரூராட்சி தலைவர் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர். உடனடியாக பண்ணையை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி