குமரி விசைப்படகில் கர்நாடக கடலில் மோதிய கப்பல்

1170பார்த்தது
குமரி விசைப்படகில் கர்நாடக கடலில் மோதிய கப்பல்
குமரி மாவட்ட விசைப்படகில் 6 மீனவர்கள் கடந்த 12ஆம் தேதி தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். நேற்று (மே 24) காலை கர்நாடகா மாநிலம் மங்கலாபுரம் கடல் பகுதியில் ஆழ் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த ஓசன் ரேடியன்ஸ் என்ற சரக்கு கப்பல் மோதி மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து மங்கலாபுரம் மீன்பிடித் துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. படகின் உரிமையாளர் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி