கன்னியாகுமரி மாவட்டம் ஆறுகாணி அருகே தேசிய காசநோய் கண்டறிதல் ஒழிப்பு திட்டத்தின் கீழ் நிக்ஷய் ஷிவிர் 100 நாள் நோய் கண்டறியும் முகாம் மற்றும் விழிப்புணர்வு இன்று (22.05.2026) ஆறுகாணி துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. சித்த மருத்துவர் Dr. சுகன்யா காசநோய், அதன் தாக்கங்கள், ஆரம்ப அறிகுறிகள், மற்றும் சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கினார். ஊர் மக்கள் கலந்துகொண்டு ஆலோசனை பெற்றனர். நிலவேம்பு கசாயம் பொடியும் வழங்கப்பட்டது. வார்டு கவுன்சிலர் பெமினா, பல் நோக்கு பணியாளர் அருள் புனித குமாரி, சுகாதார செவிலியர்கள், டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் பங்கேற்றனர்.