கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் ரோட்டில் மழைநீர் கடைகளுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் ஜங்ஷனில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் ஹரிஹரன் தலைமையில் மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.