திக்குறிச்சி: மஹா தேவர் கோயில் காளை மாடு உயிரிழப்பு

3பார்த்தது
திக்குறிச்சி மஹா தேவர் கோயிலில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்க்கப்பட்ட காளை மாடு நேற்று உயிரிழந்தது. பக்தர்கள் இதனை சிவபெருமானின் வாகனமாக கருதி வழிபட்டு வந்தனர். பக்தர்களிடம் சாதுவாக பழகி வந்த இந்த காளை மாட்டின் மறைவையொட்டி, கோயில் வளாகத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், ஆத்ம சாந்தி பிரார்த்தனையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி சடங்கில் திரளான பக்தர்கள் கண்ணீர் மல்க கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி