மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி மஹா தேவர் கோயிலில் நேற்று காலை காணிக்கை பெட்டி பூட்டு உடைந்த நிலையில் காணப்பட்டது. மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது பணம் ஏதும் கொள்ளை போகவில்லை. இன்று 7ம் தேதி பம்மம் பகுதியில் ஒருவரை பிடித்து விசாரித்தபோது அவன் திக்குறிச்சி மஹா தேவர் கோயில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மனோஜ் (29) என்பது தெரிய வந்துள்ளது. விசாரணையில், காணிக்கை பெட்டி பூட்டை உடைத்த போது, கோயில் கருவறையில் உள்ளிருந்து ஏதோ சத்தம் கேட்டு பயந்ததால் பணம் ஏதும் எடுக்காமல் தப்பி ஓடியதாக தெரிவித்து உள்ளான்.