திற்பரப்பு பகுதி கோதையாற்றில் உறை கிணறு அருகே முதலை சுற்றி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் முதலையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று 5வது நாளாக தேடுதல் பணி தொடர்கிறது. இந்த பரபரப்புக்கு மத்தியிலும், ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள திற்பரப்பு உல்லாச படகு சேவையில் பொதுமக்கள் உற்சாகமாக படகு சவாரி செய்து வருகின்றனர்.